பிரேசிலின் லான்ரினா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருத்துவ பரிசோதனைக்காக அவரது உடலை ஸ்கேன் செய்தபோது, அவரது குடல் பகுதியில் நன்கு வளர்ச்சியடைந்த மீன் இருந்தது தெரியவந்தது. சுமார் 2 அடி நீளமிருந்த மீன் அறுவை சிகிச்சை மூலம் உயிரோடு வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அறுவை சிகிச்சையின்போது அந்த நபரின் உடலில் இருந்து நீளமான மீனை மருத்துவர் உயிரோடு அகற்றினார். அப்போது உடன் இருந்த மருத்துவர்கள் அதனை வீடியோ எடுத்ததாகவும், கூச்சலிட்டு ஆரவாரம் செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அந்த நபரின் உடலில் துளையிட்டு மீன் உள்ளே சென்றிருக்கலாம் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.
அறுவை சிகிச்சைக்கு பின் குணமடைந்த நபர் தனது அனுமதி இல்லாமல் தனக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சை படமாக்கப்பட்டதாகவும் அந்த வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்டதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து முறையான அனுமதி இல்லாமல் அறுவை சிகிச்சையை படமாக்கியது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.