2
இலண்டன் ஈஸ்ட்காம் பகுதியை சேர்ந்த திரு பாரி அவர்கள் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு நடாத்தும் கற்பகா கணணி கல்வி நிலையங்களுக்கு ஐந்து கணணிகளை அன்பளிப்பு செய்துள்ளார்.
கிளிநொச்சி மத்திய நகரிலும் இராமநாதபுரம் கிராமத்திலும் நடைபெறும் இன் நிலையங்களுக்கு தற்போதுள்ள வசதிகளை அதிகரிக்கும் நோக்குடன் திரு பாரி அவர்கள் தனது ஐம்பதாவது பிறந்த தின நிகழ்வில் வைத்து இவ் அன்பளிப்பினை வழங்கியுள்ளார்.