செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இத்தாலியருக்கு கிடைத்தது கின்னஸ் விருது | அதிக கோக் கேன்களை சேகரித்து சாதனைஇத்தாலியருக்கு கிடைத்தது கின்னஸ் விருது | அதிக கோக் கேன்களை சேகரித்து சாதனை

இத்தாலியருக்கு கிடைத்தது கின்னஸ் விருது | அதிக கோக் கேன்களை சேகரித்து சாதனைஇத்தாலியருக்கு கிடைத்தது கின்னஸ் விருது | அதிக கோக் கேன்களை சேகரித்து சாதனை

1 minutes read

ஒரே நிறுவனத்தின் குளிர்பான கேன் சேகரிப் பில், சாதனை படைத்த இத்தாலியருக்கு, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் விருது வழங்கப்படுகிறது.

இத்தாலியை சேர்ந்த, டேவிட் என்பவர் ஒரு குளிர்பான பிரியர். அதுவும் கோகோ கோலா நிறுவனத்தின் கேன்களை அதிகளவு வாங்குவார்.

தன் ஐந்தாவது வயது முதல், கோக் நிறுவன குளிர் பானத்தை குடிப்பதுடன், அந்தக் கேன்களை சேகரித்து வைக்கும் வழக்கம் இருந்தது. தற்போது, 42 வயதாகும் டேவிட், எந்த நாட்டுக்கு சென்றாலும், கோகோ கோலா குளிர்பானக் கேன்களையே வாங்குவார். காலியான கேன்களை குப்பையில் போடாமல், வீட்டுக்கு எடுத்து வந்து, பாதுகாப்பாக வைத்து விடுவார். இத்தாலி மட்டுமல்லாமல், 87 நாடுகளில் இருந்து, இந்த கேன்களை டேவிட் சேகரித்திருந்தார்.

அவற்றில், கோல்ட் மற்றும் சில்வர் கேன்களைத் தவிர, பல நாடுகளில், கிறிஸ்துமஸ் மற்றும் விளையாட்டுப் போட்டிகளின் போது விற்பனை செய்யப்படும் சிறப்பு கேன்களும் இடம் பெற்றிருந்தன. ஏறக்குறைய 37 ஆண்டுகளுக்குப் பின், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி, இந்த கேன்களின் எண்ணிக்கை 10,588 ஆனது. இவரது சாதனையை பதிவு செய்த கின்னஸ் உலக சாதனை புத்தகம், அடுத்த ஆண்டுக்கான விருதுக்கு இவரைத் தேர்ந்தெடுத்துள்ளது.

 

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More