புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வை உருவாக்குவதற்காக, சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள இசை ஆல்பத்தில், ‘மைக்ரோ சாப்ட்’ நிறுவனத் தலைவர் பில்கேட்ஸ் நடித்துள்ளார்.
உலகிலேயே சிகரெட், பீடி போன்ற புகையிலை பொருட்களுக்கு அடிமையானவர்கள் அதிகமாக உள்ள நாடுகளில், சீனாவுக்கு முக்கிய இடம் உண்டு. இங்கு, 30 கோடி பேர் புகையிலை பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள். இவர்களுக்கு புற்று நோய் போன்ற நோய்கள் ஏற்படுவதும் அதிகரித்து உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஒலிம்பிக்கில், ஜிம்னாஸ்டிக் போட்டி யில் தங்கப் பதக்கம் பெற்ற, ‘பெங் ஜீ’ என்பவர் ஒரு இசை ஆல்பம் தயாரித்துள்ளர். இந்த ஆல்பத்தில், ‘மைக்ரோ சாப்ட்’ மென்பொருள் வடிவமைப்பு நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், சிறப்பு தோற்றத்தில் நடித்து உள்ளார்.
டி – ஷர்ட் அணிந்த நிலையில், விழிப்புணர்வு குறித்த பாடலின் சில வரிகளை பாடுவது போல் அவர் நடித்துள்ள இசை ஆல்பத்துக்கு, பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பில்கேட்சின் இந்த சமூக சேவைக்கு, சமூக வலை தளங்களில் பாராட்டு குவிந்துள்ளது.