2
சீனாவின் தலைநகரான பெய்ஜிங் நகரில் பொது இடங்களில் புகைப் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புகை ஒழிப்பை படிப்படியாகக் கொண்டு வரும் நோக்கத்துடன் சீன அரசு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பணியிடங்கள், போக்குவரத்து வாகனங்கள் உட்பட பொது இடங்களில் புகைப் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை உத்தரவு வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. உலக நாடுகளிலேயே புகைப்பிடிப்பவர்களை அதிகம் கொண்ட நாடாக சீனா விளங்குவது குறிப்பிடத்தக்கது.