மரண தண்டனை நிறைவேற்றத்தை உலக நாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது குறித்து ஐ.நா. பொதுச்சபை முன் வைக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களித்துள்ளது.
தங்கள் சட்டங்களை பயன்படுத்தி குற்றவாளிகளை தண்டிக்கும் நாடுகளின் உரிமையை அந்த தீர்மானம் பு றக்கணிப்பதால் அதனை எதிர்த்ததாக இந்தியா விளக்கமளித்துள்ளது.
சமூக, மனிதாபிமான, கலாச்சார விவகாரங்களை கவனித்து வரும் ஐ.நாவின் மூன்றாவது குழு குறிப்பிட்ட சிலருக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உலக நாடுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.
15 வயதுக்குட்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், மனநலன் அல்லது அறிவுத்திறன் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை உறுப்பு நாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 114 நாடுகளும், எதிராக 3 6 நாடுகளும் வாக்களித்தன. 34 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த 36 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இது குறித்து ஐ.நா.வுக்கான இந்திய தூதுக்குழுவின் முதன்மை செயலர் மயங்க் ஜோஷி அளித்த விளக்கத்தில், மரண த ண்டனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடனேயே அந்த தீ ர்மானம் கொண்டு வரப்பட்டது.