செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இங்கிலாந்தில் அரச குடும்ப தம்பதியுடன் உணவு சாப்பிட ரூ.60 லட்சம்இங்கிலாந்தில் அரச குடும்ப தம்பதியுடன் உணவு சாப்பிட ரூ.60 லட்சம்

இங்கிலாந்தில் அரச குடும்ப தம்பதியுடன் உணவு சாப்பிட ரூ.60 லட்சம்இங்கிலாந்தில் அரச குடும்ப தம்பதியுடன் உணவு சாப்பிட ரூ.60 லட்சம்

0 minutes read

இங்கிலாந்து இளவரசர் வில்லியமுக்கும், அவருடைய இளம் மனைவி கேதே மிடில்டனுக்கும் ஸ்காட்லாந்தில் உள்ள ஆன்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் படித்தபோதுதான் காதல் மலர்ந்தது. சில ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்காக இருவரும் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிதி திரட்ட முடிவு செய்தனர்.

இதற்காக இருவரும் விசேஷ விருந்து நிகழ்ச்சி ஒன்றை வருகிற 9-ந் தேதி நடத்தப்போவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் கலந்து கொள்ள ரூ.60 லட்சம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விருந்தில் பங்கேற்ற பின்பு இளவரசர் வில்லியம்-கேதே மிடில்டன் அருகில் நின்று புகைப்படமும் எடுத்துக்கொள்ளலாம்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இந்த அரச குடும்ப தம்பதி அளிக்கும் விருந்தில் பங்கேற்க இதுவரை 450 அமெரிக்க கோடீசுவரர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். இதன் மூலம் 270 கோடி ரூபாய் நிதி திரண்டு உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More