ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவுப் போராட்டம் தொடங்குவதற்குக் காரணமான “ஆக்குபை சென்ட்ரல்’ ஒத்துழையாமை இயக்கத்தைத் தோற்றுவித்த தலைவர்கள் போலீஸôரிடம் புதன்கிழமை (டிச. 3) சரணடையப் போவதாக அறிவித்துள்ளனர்.
பென்னி தாய், சான் கின்-மான், சூ யூ-மிங் ஆகிய அந்த மூவரும், ஹாங்காங்கில் ஜனநாயக சீர்த்திருத்தத்தை வலியுறுத்தி கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே
ஒத்துழையாமை இயக்கத்தை முன்னின்று நடத்தினர். எனினும், மாணவர் குழுக்களின் தீவிரப் போராட்டத்தில் இவர்கள் பின்னால் இருந்து மட்டுமே செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில், ஜனநாயகத்துக்கான போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்லும் வகையில், போலீஸôரிடம் சரணடைவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
“”சரணடைவதால் நாங்கள் கோழைகள் என்று அர்த்தமல்ல. ஹாங்காங் அரசின் இரக்கமற்ற தன்மையை வெளிப்படுத்துவதற்காகவே நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.