வரும் 2016 ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுவது குறித்து விரைவில் எனது முடிவை அறிவிப்பேன்,” என, புளோரிடா மாகாண முன்னாள் கவர்னர் ஜெப் புஷ் தெரிவித்துள்ளார். இவர், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மகனும், முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷின் சகோதரரும் ஆவார்.
நிகழ்ச்சி ஒன்றில் ஜெப் புஷ் பேசியதாவது, நான் அதிபர் தேர்தலில் நிற்பது குறித்து பரிசீலித்து வருகிறேன். நான் நல்ல வேட்பாளரா, கெட்ட வேட்பாளரா என்பது எனக்கு தெரியாது. மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவேனா இல்லையா என்பதை, குடியரசு கட்சி தான் முடிவு செய்யும்.
அதன் அடிப்படையில் தான் என்னை வேட்பாளராக நிறுத்தும். இந்த நாட்டிற்காக எனது குடும்பம் செய்த சேவைகளும் கருத்தில் கொள்ளப்படும். தேர்தலில் எப்படி வெல்வது என்ற சூட்சமம் எனக்கு தெரியும். இவ்வாறு, ஜெப் புஷ் கூறினார்.