அபிவிருத்தி வேலைகளை முன்னெடுக்கும் பொருட்டு தாம் இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிக்க முடிவு செய்துள்ளனர் என்று கிளிநொச்சி பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை தலைவர், உபதலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருவருமாக நால்வரும் தெரிவித்துள்ளனர்.
இன்று புதன்கிழமை 31-12-2014 வவுனியா தனியார் விடுதி ஒன்றில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஊடக மாநாடு இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு ஜனாதிபதி மஹிந்தவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும்போதே இவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் டொமினிக் அன்ரன், உப தவிசாளர் ரிஷிதாசன், உறுப்பினர்களான பேரின்பகரன், சிவராஜா ஆகிய நால்வருமே இவ்வாறு ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர்