பிரான்சில், பத்திரிகை அலுவலகம் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து, பாரீசில், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது.
10 லட்சம் பேர்:இதில், 40க்கு மேற்பட்ட நாடுகளின் முக்கிய தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற இப்பேரணியையொட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பேரணி செல்லும் வீதி முழுவதும் 2,000 போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். இத்துடன், 1,340 ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.முன்னதாக, இப்பேரணி குறித்து பிரான்ஸ் பிரதமர் மானுவல் வேல்ஸ் கூறும்போது, ”சுதந்திரத்தை நேசிக்கும், சகிப்புத் தன்மை கொண்ட பிரான்ஸ் மக்களின் வலிமையையும், கண்ணியத்தையும், இப்பேரணி உலகிற்கு எடுத்துக் காட்டும்,” என்றார்.
நேற்று முன்தினம், பத்திரிகை அலுவலக தாக்குதலில் பலியான, 17 பேருக்கு, அஞ்சலி செலுத்தும் வகையில், பொதுமக்கள் பேரணி நடத்தினர். தல்ஹவுசி நகரில் இருந்து ரெனிஸ் நகர் வரை நடைபெற்ற இப்பேரணியில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே, கோஷர் சந்தையில் சுட்டுக் கொல்லப்பட்ட காலிபெலியின் காதலி ஹயத் பொமிடினை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால், அவர் சிரியாவிற்கு தப்பியோடி விட்டதாக, துருக்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.