ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான மூன்று எம்.பிக்கள் இ.தொ.கவின் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் முத்து சிவலிங்கம், விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) போன்றோரை புதிய அரசுக்குள் சேர்த்துக் கொள்வதில்லை என புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்திருக்கிறார் என அறிய வருகின்றது. எனினும் அரசுக்கு வெளியில் இருந்து அவர்கள் வழங்கக் கூடிய ஆதரவை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவும் புதிய பிரதமர் தீர்மானித்திருக்கிறார் என கொழும்பு அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0