சீனாவின் மிகப்பெரிய நகரமான ஷாங்காயில் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியின் போது திடீரென நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 36 பேர் பலியானார்கள். 49 பேர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களில் பெரும் பாலானவர்கள் 20 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இந்த சம்பவம் சீனாவை மட்டுமின்றி உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டு இருந்தார்.
ஆயிரக்கணக்கானோர் கூடிய இடத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததே நெரிசலுக்கு காரணம் என்று தெரியவந்தது. இதனையடுத்து 36 பேரின் உயிரிழப்புக்கு காரணமான 11 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.