நைஜீரியாவில் யோப் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 192 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வடகிழக்குப் பகுதியில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வரும் போகோ ஹராம் தீவிரவாதிகள் கடந்த ஜனவரி 6ஆம் தேதி மாநிலத் தலைநகர் தமாதுருவிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடர்கா என்ற கிராமத்தை சூறையாடினர். 25 பேரை சுட்டுக் கொன்று அங்குள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீ வைத்து குழந்தைகள் மற்றும் பெண்களைக் கடத்திச் சென்றனர்.
இந்நிலையில், தாங்கள் கடத்தி வைத்திருந்த குழந்தைகள் பெண்கள் என 192 பேரை நேற்று நான்கு லாரிகளில் கொண்டு வந்து தமதுருவிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிர்புவா என்ற கிராமத்தில் விட்டுச் சென்றனர். அங்கிருந்து அவர்கள் அரசாங்கத்தின் கண்காணிப்பில் அருகிலுள்ள நகரத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.