இலங்கையில் 2009ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின்போது நிகழ்ந்த தமிழர்கள் மீதான இனப்படுகொலை தொடர்பாக, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வடக்கு மாகாணக் கவுன்சிலில் செவ்வாய்க்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக, வடக்கு மாகாணக் கவுன்சிலில் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்த தீர்மானம் முதல்வர் விக்னேஷ்வரன் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டது.
இலங்கையில் 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையின்போது, நிகழ்ந்த போர்க்குற்றம் தொடர்பாக, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தி வரும் நிலையில், இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.