இந்தோனேசியாவில் மயூரன் சுகுமாறன் உள்பட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அவர்கள் போதை மருந்து கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்ற கூடாது என உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அதையும் மீறி மரண தண்டனை நிறைவேற்றி உள்ளனர். இதற்கு ஏற்கனவே ஆஸ்திரேலியா, பிரேசில் ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில்ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கிமூனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7 பேருக்கு மரண தண்டனை விதித்திருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. 21–ம் நூற்றாண்டில் இதுபோன்ற செயல்களை செய்வதை ஏற்க முடியாது. குற்றங்களை தடுக்க இந்தோனேசியா மாற்று வழிகளை கையாள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து இந்தோனேசியா அட்டார்னி ஜெனரல் பிரஸ்டோயோ வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் நாடு போதை மருந்து பழக்கத்தில் சிக்கி விடாமல் தடுக்க இதை தவிர வேறு வழியில்லை. நாங்கள் இதை விளையாட்டாக செய்யவில்லை. மிகவும் ஆலோசித்து தான் இந்த கடுமையான முடிவை எடுத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்