அமெரிக்க பாராளுமன்றத்தில் கருக்குழந்தைகள் பாதுகாப்பு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் 20 வார குழந்தையை கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பெண்கள் உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். கற்பழிப்பு, தகாதஉறவு மற்றும் செக்ஸ் குற்றங்களால் கர்ப்பம் அடையும் பெண்கள் இதன் மூலம் பாதிக்கப்படுவர் என தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த மசோதா மீது பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையில் நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது 242 உறுப்பினர்களை கொண்ட சபையில் 184 பேர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த மசோதாவுக்கு ஆதரவளித்ததாக எதிர்க்கட்சியான குடியரசு கட்சி பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். பிரதிநிதிகள் சபையில் குடியரசு கட்சி உறுப்பினர்கள்தான் மெஜாரிட்டியாக உள்ளனர்.
ஆனால் இச்சட்டம் சட்டவிரோதமானது என பெண்கள் உரிமைகள் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.