நேற்று நடைபெற்ற மக்கள் வாக்கெடுப்பின் மூலம் 51.9 வீதமான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்று வாக்களித்துள்ளனர். இறுக்கமான கருத்து நிலவிய போதும் சிறிய வித்தியாசத்தில் வெளியேறுவதென்ற முடிவை பிரித்தானிய மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
1993 ம் ஆண்டு உருவாக்கிய ஐரோப்பிய ஒன்றியம் தற்போது பெரும் சவால்களை எதிர்நோக்குகின்றது. உறுப்பு நாடுகளுக்குள் பொருளாதாரக் கட்டமைப்பினை மேம்படுத்தவேண்டுமென்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட அமைப்பு இது.
இன்று பிரித்தானியா வெளியேறும் முடிவை எடுப்பதற்கு அதிகரித்துவரும் அகதிகள் பிரச்சனை முக்கிய பங்கினை செலுத்தியுள்ளது.