யாழ் நடேஸ்வரா கல்லூரி பிரித்தானிய பழைய மாணவர் சங்க வருடாந்த விளையாடு விழா நிகழ்வு தற்போழுது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இலண்டன் கரோ பகுதியில் அமைந்த பணிஸ்ட்டர் விளையாட்டுத் திடலில் நடைபெறும் விளையாடு விழா சங்க தலைவர் கனா நகீரதன் தலைமையில் பெருமளவான விளையாட்டு வீரர்கள் பங்குபற்றுகின்றார்கள். தாயக உணவுகளுடனும் தாயக மண் நினைவுகளுடனும் நடேஸ்வரா கல்லூரி சமூகம் ஒன்று கூடியவண்ணம் உள்ளது.
இன்று மாலை வரை இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. மைதானத்திலிருந்து வணக்கம் லண்டன் தொடர்பாளர் அனுப்பி வைத்த படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
படங்கள் – கரன் திரு