இந்திய மத்திய அரசு நாட்டில் கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்க வரலாற்று சிறப்பு மிக்க திடீர் முடிவை எடுத்துள்ளது. அதன்படி ரூ.500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அரசு அழிக்க உள்ளதாகவும், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய நோட்டுக்களை வெளியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தலைநகர் டெல்லியில் நாட்டு மக்களுக்காக உரையாற்றியபோது இவ்வறிவித்தலை வெளியிடடார். அதாவது நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன், அந்த நோட்டுக்கள் செல்லாது எனவும் அவர் தெரிவித்தார். அதேநேரம் அவசர தேவைகளுக்காக சில சலுகைகளை செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது.
இந்திய நேரப்படி இன்று இரவு பிரதமர் இவ்வறிவித்தலை தனது உரையில் தெரிவிப்பர் என செய்திகள் வெளிவந்ததைத்தொடர்ந்து உலகத்தின் பார்வை இந்தியப்பக்கம் திரும்பியது.
ஊழல் குற்றவாளிகளை பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தவேண்டுமென்று பிரித்தானிய பிரதமர் திரேசா மே இடம் இந்திய பிரதமர் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வறிவித்தலைத் தொடர்ந்து பணத்தை பதுக்கிவைத்திருப்போர் பெரும் சிக்கலில் மாட்டியுள்ளனர். இவர்கள் தொடர்பான விபரங்களை வெளியிட இந்திய செய்தி நிறுவனங்கள் பரபரப்பாக உள்ளன.
இந்த துணிகர முடிவு பிரதமர் மோடிக்கு செல்வாக்கை கொடுக்குமா? அல்லது அவரது ஆட்சிக்கு உலை வைக்குமா? பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.