தமிழீழ எழுச்சிப் பாடகர் சாந்தன் அவர்களுக்கு இசைத்துறைக்காக பண்டாரவன்னியன் விருது வழங்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பேரவையினால் நடைபெற்ற கலாச்சார விழாவில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
தன்னுடைய குரல் வளத்தால் ஈழத்தமிழரின் மனங்களை வென்றெடுத்த சாந்தன் அவர்கள் தமிழீழ எழுச்சிப் பாடல்கள் மூலம் பெரும் புகழ் பெற்றவர்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் அநிருத்தனன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மாவடட் செயலர் ரூபவதி கேதீஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.
இந்நிகழ்வில் மேலும் பத்து துறைசார் சாதனையாளர்களுக்கு “பண்டாரவன்னியன்” விருது வழங்கப்பட்டுள்ளது.