நேற்றைய தினம் 15ம் திகதி இலண்டனில் கிளி மக்கள் அமைப்பு நடாத்திய ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
லண்டன் புறநகர் பகுதியான பெல்தம் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டதுடன். கிளி மக்கள் அமைப்புக்கு பெரும் ஆதரவு வழங்கினர்.
சிகரம் அமைப்பின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் இளம் கலைஞர்களான பல்லவி இசைக்குழுவின் சிறப்பான இசைநிகழ்வு நடைபெற்றது.
99 துவிச்சக்கர வண்டிகள் சேகரித்து கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்துடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் அன்றைய தினம் நிகழ்வு ஆரம்பிக்கும் வரை சுமார் 114 துவிச்சக்கர வண்டிகள் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வுக்கு கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து கிளிநொச்சி மக்கள் கலந்து கொண்டனர்.