கடந்த வார இறுதியில் இலண்டன் மத்தியில் பெரு நிகழ்வாக நடைபெற்ற தமிழ் நடனப் போட்டியில் பேர்மிங்காம் பல்கலைக்கழக மாணவர் அணி வெற்றி பெற்றுள்ளது.
சுபரா நிறுவன ஆதரவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஆறு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தனி நடனத்துக்கான போட்டியில் கனடா, ஜேர்மனி, சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் இருந்து இளம் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இளையோருக்கான போட்டியில் பிரித்தானியாவைச் சேர்ந்த நடன பள்ளிகளில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் நடுவர்களின் ஒருவராக தென்னிந்திய தமிழ் திரைப்படத்துறை நடன இயக்குனர் காலா மாஸ்டர் கலந்து கொண்டார்.