அடிப்படைவாதிகளையும் இனவாதிகளையும் பொருட்படுத்தாமல் நாட்டில் அமைதியையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்த போவதாக தேசிய சக வாழ்வு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
நாங்கள் ஒரு அடி முன்னேறும் போது நாட்டிலுள்ள அடிப்படைவாதிகளும் இனவாதிகளும் எம்மை பின்நோக்கி இழுக்கின்றனர். இவ்வாறு பின்நோக்கி இழுப்பதனால் நான் மனம் தளர்வேன் என யாரும் நினைத்தால் அது தவறு. நான் மனம் தளர மாட்டேன். ஒரு புறம் இனவாதம் மற்றும் அடிப்படைவாதத்தை கிளப்பும் போது நாங்கள் மறுபுறத்தில் இருந்து கொண்டு நாட்டை முன்னேற்றுவோம். நாட்டில் ஐக்கியம், சமாதானம், சக வாழ்வை ஏற்படுத்துவோம். இலங்கையர் என்ற வகையில் நாங்கள் முன்னோக்கி செல்வோம் என தெரிவித்தார்.
பாணந்துறை எலுவில ஆலவ்வியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதேஅமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். களுத்துறை மாவட்டத்திலுள்ள அகதியா பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற பொது அறிவு மற்றும் கலாசார போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் அமைச்சரினால் வழங்கப்பட்டன.