ரஷ்யாவின் வர்த்தக கட்டிட தொகுதியொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி 64 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவின் கொமரவோ நகரிலுள்ள வின்டர் செரி கடைத்தொகுதியின் மேல் மாடியிலேயே இவ்வாறு தீ ஏற்பட்டது. இங்குள்ள சினிமா அரங்கொன்றில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த இரசிகர்களே இத்தீயில் சிக்கி அதிகளவில் உயிரிழந்தனர்.
தீ ஏற்பட்ட போது மக்கள் தமது உயிரை காப்பாற்றிக் கொள்ள கட்டிடத்திலிருந்து குதிக்க முயல்வதை அவதானிக்க முடிந்தது. இத்தீ விபத்தில் சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் காணாமல் போயுள்ளனர். தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.