இலங்கையுடனான தொடர்பினை மேலும் வலுப்படுத்த வியட்நாம் எதிர்ப்பார்த்துள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பொருளாதார தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கையுடனான அனைத்து துறைசார் தொடர்புகளையும் வலுப்படுத்த வியட்நாம் விருப்பம் தெரிவித்துள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் வியட்நாம் நாடாளுமன்றத் தலைவர் Nguyen Thi Kim ஆகியோருக்கு இடையில் அண்மையில் சுவிட்சர்லாந்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது வியட்நாம் சார்பில் இலங்கையுடனான உறவை வலுப்படுத்துவது குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன்இ இருநாடுகளுக்கும் இடையிலான உற்பத்தித்துறை சார்ந்த ஒத்துழைப்பினை வலுப்படுத்துவது குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது