வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் இரணைத்தீவு மக்களை நேற்று (14.05.2018) சந்தித்ததுடன் அவர்களுக்கு உலர் உணவுகளும் வழங்கிவைத்தனர்.
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள இரணைத்தீவு மக்கள் தங்களின் சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி கடந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் 359 ஆவது நாள் வரை எவ்வித தீர்வும் இன்றி தொடர்ந்த நிலையில் பொறுமையிழந்த மக்கள் தாங்களாகவே தங்களின் சொந்த நிலமான இரணைத்தீவுக்குச் சென்று குடியேறினர்.
இதனை தொடர்ந்து பல அரசியல்வாதிகளும் நிலமீட்ட போராளிகளாக விளங்கிய இரணைத்தீவு மக்களை சென்று பார்வையிட்டு வந்த நிலையில் நேற்று ( 14-05-2018) வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி. விக்கினேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், முன்னாள் வடக்கு விவசாய அமைச்சர் ஜங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்டவர்கள் சென்று மக்களை சந்தித்துள்ளனர்.