0
இந்தியாவில் அதிகளவானோர்உயிரிழக்க சாலை விபத்துக்களே காரணம். அதிகம் சாலை விபத்துக்கள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகிப்பதோடு, தமிழகத்தில் அதிகம் விபத்துகள் நடைபெறும் நகரங்களில் கோவைஇரண்டாவது இடத்தில் உள்ளது.
கோவையில் நிகழும்70% விபத்துகளுக்கு விதிகளை மதிக்காமல் நடந்து கொள்வதும், மிதமிஞ்சிய வேகமும், குடித்துவிட்டுவாகனங்களை ஓட்டுவதும் தான் காரணம் என்கிறது புள்ளிவிபரம். அந்தவகையில்கோவையில் சாலை விபத்துகளினால் உண்டாகும் உயிரிழப்பு, உடல் ஊனம் ஆகியவற்றைத் தவிர்க்கவும், மக்களிடையே விழிப்புணர்வைஏற்படுத்தவும்கோவையில் ‘உயிர்’ எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வமைப்பிற்கான தொடக்கவிழா நாளை கோவை கொடீசியா வளாகத்தில் நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் பழனிச்சாமி இவ்வமைப்பினைத் துவக்கி வைக்க இருக்கிறார்.