கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள நன்பர்கள் விருந்தகத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது அன்பளிப்பாக வழங்கப்பட்;ட பணத்தினை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கடும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள நன்பரகள் ;விருந்தினர் விடுதியில் கடந்த ஜூன் மாதம் 05ம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் அன்பளிப்பாக வழங்;கப்பட்ட பெருந்தொகை நிதி கொள்ளையிடப்பட்;டமை தொடர்பில் கடந்த ஜூன் மாதம் 09ம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சிப் பொலிசார் விடுதியில் பொருத்தப்;பட்ட சீ.சீ.ரீ, வி கமரா பதிவுகளை ஜூன் மாதம் 28ம் திகதி பார்வையிட்டு அதனை அடிப்படையாக வைத்து சந்தேக நபர் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மேற்படி சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, குறித்த சந்தேக நபர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
மேற்படி சந்தேக நபரை (11-09-2019) அன்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றில் நீதி மன்ற நீதிவான் ரீ. சரவனராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு கடும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதாவது குறித்த குற்றச்;சாட்டுத் தொடர்பில் கை செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்;பட்டிருந்த சந்தேக நபரை சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான கிராம அலுவலர் வதிவிடத்தை உறுதிப்படுத்திய தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணைகளிலும் இருபத்தி ஐயாயிரம் ரூபா பெறுமதியான காசுப்பிணையிலும் செல்லுமாறும் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ம்திகதி வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.
குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிசார் சந்தேக நபருக்கு சார்பாகவே செயற்பட்டு வருவதாகவும் இது தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிசார் முன்னெடுக்க தவறி வருகின்றனர் என்றும் கடந்த தவணைகளில் முறைப்பாட்டாளர் சார்பாக ஆயரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் தொலைபேசி உரையாடல்களின் அடிப்படையில் மேலும் இருவரை கைது செய்யவுள்ளதாக குறிப்பிட்டாலும் குறித்த இரு சந்தேக நபர்களையும் இதுவரை கைது செய்ய எந்தவித நடவடிக்கையும் பொலிசார் எடுக்கவில்லை என்றும் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.