வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள அசுரன் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந் நிலையில் இப் படத்தில் சர்ச்சைக்கு உரிய வசனம் இடம்பெற்றுள்ளது என்றும் அதை நீக்க வேண்டும் என்றும் நடிகர் கருணாஸ் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் அந்த வசனத்தை வெற்றிமாறன் நீக்கியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அசுரன் படத்தில், ஆண்ட பரம்பரை நாங்கதான், எங்ககிட்டே இருந்து உங்களுக்கு இடம் வந்ததா, இல்ல.. உங்ககிட்டே இருந்து எங்களுக்கு இடம் வந்ததா என்ற வசனம், முக்குலத்தோர் மக்களின் மனசில் காயத்தை ஏற்படுத்துகிறது என்று வெற்றிமாறனிடம் குறிப்பிட்டேன். உடனே அந்த வசனத்தை வெற்றிமாறன் நீக்கியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தில், தலித் சமூக இளைஞராக, தனுஷின் இளைய மகனாக, ஆண்ட பரம்பரை தலைவரை வெட்டிச் சாய்க்கும் வேடத்தில், கருணாசின் மகன் கென் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.