அண்மையில் சென்னையில் வெளியிடப்பட்ட சுவையான சங்ககால உணவு புத்தகம் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சங்ககால சமையல் குறித்து பிரியா பாஸ்கரன் எழுதிய தொடர் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் சென்னை புத்தக கண்காட்சியில் இப் புத்தகம் வெளியிடப்பட்டது. கண்ணதாசன் பதிப்பகம் இந்த புத்தகத்தை பிரசுரித்துள்ளது.
சென்னை புத்தக கண்காட்சி அரங்கில் இடம்பெற்ற நூல் வெளியீட்டில், நடிகை அனுகாசினி, நடிகர் தாமு மற்றும் கவிஞர் கண்ணதாசனின் மகள் ரேவதி சண்முகம் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமை விசேட அம்சமாகும்.