செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் உலகை தூய்மைப்படுத்தும் கொரோனா !!!

உலகை தூய்மைப்படுத்தும் கொரோனா !!!

1 minutes read

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதனால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.எனினும் இதனால் இயற்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, சுற்றுச்சூழல் மாசு கணிசமாக குறைந்து வருவதாக கூறப்படுகின்றது.

வாகன பயன்பாடுகளின் குறைவு மற்றும் தொழிற்சாலைகளின் செயலிழப்பு ஆகியவற்றின் காரணமாக காற்று மாசுபாடு கணிசமாக குறைந்துள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையில், நாசா வெளியிட்டுள்ள சமீபத்திய செயற்கைக்கோள் தரவுகளின்படி, வடகிழக்கு அமெரிக்கா முழுவதும் காற்று மாசுபாடு கடந்த சில வாரங்களில் சுமார் 30 வீதம் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அத்துடன், உலகின் ஏனைய பகுதிகளையும் நாசா விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 2015 முதல் 2019 மார்ச் வரையிலான காலகட்டத்தில் காற்று மாசுபாட்டை இந்த படம் காட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த செயற்கைக்கோள் படம் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக காற்று மாசுபாடு எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

இதனிடையே, இருபது ஆண்டுகளுக்கு பின்னர் கொழும்பு நகரில் வளி மாசடையும் வீதம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் மட்டுமல்ல, நாட்டின் பிற பகுதிகளிலும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் காணப்படுகின்றன.

தேசிய பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் செல்லாத நிலையில் வனவிலங்குகள் சுதந்திரமாக திரிவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More