வெலிசர கடற்படை முகாமில் உள்ள 30 இலங்கை கடற்படை சிப்பாய்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதியாகியுள்ளது.
ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஏனைய கடற்படையினரிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையை தொடர்ந்து 29 சிப்பாய்களுக்கு குறித்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சிப்பாய்களுக்கு கொரோனா தொற்றியமைக்கான காரணத்தை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜாஎல – சுதுவெல்ல பிரதேசத்தில் போதைப்பொருளுக்கு அடிமையான கொரோனா நோயாளிகள் சிலர் அடையாளம் காணப்பட்டனர்.
கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த பகுதியில் உள்ள மக்களை தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் குறித்த சிப்பாய்கள் ஈடுபட்டிருதனர்.
இதன் போதே அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக உறுதியாகியுள்ளதென இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.