மறைந்த கொரானா சிகிச்சை மருத்துவர்
++++++++++++++++++++++++++++++++++++++
சென்னை Dr.சைமன் அவர்களுக்கு
+++++++++++++++++++++++++++++++++++ மயிலாடுதுறை முன்னாள் MLA திரு.ஜெகவீரபாண்டியன், அவர்கள் தலைமையில் மயிலாடுதுறை தொகுதி மக்களின் சார்பில் நன்றி இதய அஞ்சலி! …….
======+++++======+++++=======+++++=====+++++===
கொரானா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த சென்னை தனியார் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் சைமன் அவர்கள் கொரானா நோயால் பீடிக்கப்பட்டு சென்னையில் காலமானார்கள். புகழ்பெற்ற நரம்பியல் நிபுணரான டாக்டர் சைமன் அவர்களின் இறுதி நிகழ்வில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை நாம் மன்னித்து மறந்து, உலகமே டாக்டர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். மருத்துவர்கள் இல்லை என்றால் நமது நிலை என்ன என்பதை அறியாதவர்கள், பாவிகள்,செய்த பெரும் பிழைக்கு டாக்டர் சைமன் அவர்கள் ஆன்மா பொறுத்தருள வேண்டும் என்ற கோரிக்கையோடு, மயிலாடுதுறை மக்களின் சார்பில் எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் டாக்டர் சைமன் அவர்களே உங்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.மேலும் மயிலாடுதுறையை பகுதியைச் சேர்ந்த பலருக்கும் டாக்டர் சைமன் அவர்களிடம் பல ஆபத்தான கட்டங்களில் சென்று மருத்துவ உதவிகளை பெற்றதாக வருகின்ற தகவல்கள் மிகவும் நெகிழச் செய்கிறது. உங்கள் சேவையை தலை வணங்குகின்றோம்….. எங்கள் வீர வணக்கத்தை காணிக்கையாக்குகிறோம்….. இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் , பொது தொழிலாளர்கள் சங்க செயலாளர் அ. அப்பர்சுந்தரம், ஆசிரியர் மன்ற மாநில செயலாளர் ஜெகமணிவாசகம், இன்றிய கவுன்சிலர் பட்டவர்த்தி வடவீரபாண்டியன், ஜன புனிதம் அமைப்பின் நிறுவனர் ஜனபுனிதர், ஆஞ்சநேயர் சித்த மருத்துவமனை மருத்துவர் தாமரைக்கண்ணன், ராஜேஷ்வரன், சிங்கார முத்துசாமி ஸ்டிக்கர் செல்வம் மனிதநேயம் அன்பின் ஜோதி, திருநாவுக்கரசு உள்ளிட்டவர்கள் பங்கேற்று புஷ்ப அஞ்சலி, மவுன அஞ்சலி, மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செய்தனர்…..
1