நாடளாவிய ரீதியில் தற்சமயம் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மேலும் இலகுபடுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நாளை முதல் நாளாந்தம் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை இரவு 11 மணி வரையில் இருந்து அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்திருந்த நிலையில் ஊரடங்கு சட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.