நெருப்பு வலய சூரிய கிரகணம் என பெயரிடப்பட்டுள்ள 2020ம் ஆண்டின் முதலாவது சூரியக்கிரகணம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிகழவுள்ளது.
இதன்போது இலங்கையர்களினால் சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
நாளை முற்பகல் 9.15 தொடக்கம் பிற்பகல் 3.04 வரை சூரிய கிரகணம் நீடிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாளை முற்பகல் 10.20 அளவில் சூரியகிரகணத்தை பகுதியளவில் கொழும்பு நகரில் பார்வையிட முடியும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரட்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முற்பகல் 10.24 முதல் யாழ்ப்பாணத்திலும் முற்பகல் 10.34 முதல் மாத்தறையிலும் சூரிய கிரகணத்தை பகுதியளவில் பார்வையிட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.