3
இந்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா நினைவு இல்லம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த இழப்பீட்டு தொகையை சென்னை சிவில் நீதிமன்றத்தில் தமிழக அரசு செலுத்தி உள்ளது. இழப்பீட்டு தொகையை செலுத்தியதால் அரசுடைமையாக்கப்பட்டுவிட்டதாகவும் கூறி உள்ளது.
ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரின் எதிர்ப்பை மீறி, போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டிருப்பதால் அவர்கள் மேல் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.
இது முடிவு அல்ல, இனிதான் ஆரம்பம் என்று கூறி உள்ள ஜெ.தீபா, வேதா நிலையத்தை அரசுடைமையாக்க விடமாட்டேன் என்றும், சட்ட ரீதியாக மீட்டெடுப்பேன் என்றும் கூறியிருக்கிறார்.
‘வேதா இல்லத்தை விட்டுத் தரவேண்டும் என ஜெயலலிதா நினைக்கவில்லை. அவர் மரணம் எதிர்பாராதது, இல்லையென்றால் உயில் எழுதி வைத்திருப்பார்’ என்றும் தீபா கூறி உள்ளார்.
ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடைமையாக்கியது மகிழ்ச்சியான செய்தி என்றும், வேதா இல்லம் ஃகிப்டாக வந்து என தீபா நினைக்க வேண்டாம் என்றும் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றாவிட்டால் வரலாறு தங்களை மன்னிக்காது என்று வைகைச் செல்வன் கூறி உள்ளார்.