செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சில நிமிட நேர்காணல் வெளியில் தெரியாமல் இன்னும் நடக்கும் யுத்தத்தை பேசியிருக்கிறோம் | இயக்குனர் ரஞ்சித் ஜோசப்

வெளியில் தெரியாமல் இன்னும் நடக்கும் யுத்தத்தை பேசியிருக்கிறோம் | இயக்குனர் ரஞ்சித் ஜோசப்

4 minutes read

மனம்திறக்கும் சினம்கொள் பட இயக்குனர் ரஞ்சித் ஜோசப்

ஈழத்தின் நீர்வேலியை பூர்வீகமாகக் கொண்ட ரஞ்சித் ஜோசப் தற்போது கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். தமிழக திரைப்படங்களில் பணி புரிந்த இவர் சமீபத்தில் இயக்கியுள்ள சினம் கொள் திரைப்படம் உலக தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ஓடிடி தளத்தில் இரண்டாம் கட்டமாக வெளியாகும் இந்த படத்தில் பாடலாசிரியர் மற்றும் வசன கர்த்தா தீபச்செல்வன், ஒளிப்பதிவாளர் பழனிக்குமார் மாணிக்கம் இசையமைப்பாளர் என்ஆர். ரகுநந்தன் படத்தொகுப்பாளர் அருணாசலம் ஆகியோர் பணியாற்றியுள்ளார். பெரும் சவால்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட சினம் கொள் படம் குறித்து இயக்குனர் ரஞ்சித் ஜோசப் உரிமை மின்னிதழுக்கு வழங்கிய நேர்காணல்.

சினம் கொள் படத்தை பற்றி சொல்லுங்கள்?

2009 ல் ஈழ விடுதலை போருக்கு பிறகு ஈழ மண்ணில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம்.யுத்தத்திற்கு பிறகு இன்றைய ஈழ மக்களின் வாழ்வியலை பேசும் படம். போரின் வடுக்களோடு  வாழும் மக்களின் அவலத்தை மட்டுமல்லாது போருக்கு பிறகு அவர்கள் சந்தித்த நெருக்கடிகளையும், பொருளாதார சிக்கல்களையும், சிறையிலிருந்து வெளிவந்த போராளிகளின் வாழ்வியலையும் சொல்லியிருக்கிறோம். உலகத்திற்கு யுத்தம் முடிவுற்றது என்று சொல்லப்பட்டாலும் இன்னும் வெளியில் தெரியாத யுத்தம் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.

படத்தில் பணியாற்றியவர்கள் குறித்து

படத்தில் நாயகனாக அரவிந்த் சிவஞானமும் நாயகியாக நர்வினி டேரியும் நடித்துள்ளனர். அத்துடன் லீலாவதி, சிந்தர், தீபச்செல்வனுடன் நானும் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். தமிழகத்தின் பிரபல இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் படத்திற்கு இசையமைத்துள்ளார். பிரபல பாடகி வந்தனா ஸ்ரீனிவாசன் பாடல் ஒன்றை பாடியுள்ளார். ஈழம், சிங்கள தேசம், மலையகம், தமிழ்நாடு, சர்வதேசம் என பல்வகைக் கலைஞர்கள் பங்களித்த படம் இது. ஈழம் குறித்து எந்த சமரசமும் இல்லாத வகையில் அமைந்துள்ள இந்தப் படத்தில் சிங்களக் கலைஞர்களும் பணியாற்றியுள்ளனர். 

உலக நாடுகளில் படத்தை திரையிட்ட போது எத்தகைய வரவேற்பு கிடைத்தது?

உலக நாடுகளில் படத்தை திரையிட்ட போது எத்தகைய வரவேற்பு கிடைத்தது?   — 2020 ஜனவரி 3 திகதி முதல் முதலாக ஒரே நேரத்தில் பல நாடுகளில் பல திரையரங்குகளில்  திரையிடப்பட்ட ஈழத்திரைப்படம் சினம்கொள். மக்களின் பேராதரவோடு அனைத்து இடங்களிலும்  நங்கள் வெற்றியடைந்தோம். 2009 பேருக்கு பின்னாரன எமது நிலத்தை எமது மக்களின் கதையை சினம்கொள் பேசியதால் இன்றுவரை எம் மக்கள் மத்தியில் சினம்கொள்ளுக்கான ஆதரவு இருக்கின்றது. கோவிட் மட்டும் வந்துருக்காவிட்டால் சினம்கொள் ஈழ சினிமாவில் பொருளாதார ரீதியில் வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்திருக்கும்.

திடீரென ஏன் படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவு

எந்த ஒரு படைப்பும் மக்களுக்காகவே உருவாக்கப்படுகின்றது. கலை என்பது மாற்றத்தை நோக்கி மக்களை அழைத்து செல்லும் ஆயுதம். அந்தவகையில் சினம்கொள் எமது மக்களுக்கான திரைப்படம். பேர் தின்ற ஒரு நிலத்தின் கதையை சமரசமின்றி பேசிய படம். ஆனால் கோவிற் தொற்றால் மக்களை போய் அடையாமால் முடங்கிபோய்விட்டது. திரையரங்குள் மூடப்பட்ட சூழலில் ஓடிடியை தவிர வெறு வழி எமக்ககு கிடைக்கவில்லை. 

இலங்கையிலும் ஈழத்திலும் கட்டணமின்றி படத்தை பார்க்கலாமா? –

ஆம் இன்று நாடு போய்கொண்டிருக்கும் பொருளாதார சிக்கலில் மக்கள் அவதிபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். மூன்று வேளை உணவு என்பது பலருக்கு கிடைப்பதில்லை. அப்படியான நிலையில் மக்களுக்காய் உருவான ஒரு படைப்பை பார்ப்பதற்கு மக்களிடம் பணத்தை எதிர்பார்ப்பது தவறாக எமக்கு தோன்றியது. அதே நேரத்தில் மக்களும் பார்க்க வேண்டும் அதனால்தான் இலங்கையிலும், ஈழத்திலும் கட்டணமின்றி வெளியிட ஈழக்காண்பியிடம் பரிந்ந்துரை செய்தோம் அவர்களும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

படத்தை உருவாக்குவதில் எதிர் கொண்ட பெரும் சவால் எது? —

சவால் என்றால் திரைக்கதையில் எழுத முடியாத சிலக்காட்சிகளை படம் பிடிக்க நாம் சந்தித்த சாவல்களைத்தான் சொல்ல வேண்டும். ஒரு கலையை உருவாக்க கூட கருத்து சுதந்திரம் இல்லத மண்னில் கலையாகவும் நேர்த்தியாகவும் சினம்கொள்ளை உருவாக்க நாம் சந்தித்த அனைத்து பிரச்சனைகளும் சவால்கள் நிறைந்ததாகவும் இருந்தது. ஈழமண்ணில் மீண்டும் ஒரு முறை இன்னொரு சினம்கொள் போல் இன்னொரு திரைப்படம் சாத்தியமாகும் என்பது கேள்விக்குறியே.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More