மர அசைவின்
இரவல் மூச்சில்
பாதை யாத்திரை
செந்தரை மண்ணில் தவழ்ந்த கொடிகள் காற்றின்
அசைவில் என்னை வதனத்தோடு அழைத்தன
வெயிலின் வேட்கைக்கு
நிழல் தந்த மரத்தின் கிளையில்
சிலந்தியின் ஊஞ்சல் கயிறு..
இலை கொப்பு மேவி
பூக்களும் காய்களும்
என் புகைப்படத்தின் காட்சிகளால்..
கீச்சிடும் பறவைகளின் இருப்பிட
அரண்மனை கூடவே
உணவும் ஊடலும்
அதன் விருப்பம் போல
கலைந்த மனதை விரட்டி
திரும்பிப் பார்க்கிறேன்
“” பிணக்குவியல்கள்””
இனப்பெருக்கம்…..
இடப்பெருக்கம்…..
வீழ்த்தப்பட்ட மரங்கள்
தோல் உரித்த மழலை குருதியில் குளித்திருப்பது போல் சாய்ந்து கிடந்தன
பசி கொண்ட தன் குஞ்சுக்கு இரையதை கௌவி
வசிப்பிடம் தேடி வந்த பறவை
வீழ்ந்த மர இடையில்
தன் குஞ்சு கிடப்பதைக் கண்டு
கலங்கி மார்படித்து
தானும் வீழ்ந்தது
வீழ்ந்த மரத்தின் பழவித்தொன்று தரை விட்டெழுந்து என்னைப் பார்த்து புன்னகைத்தது
நாளைய தலைமுறை நான்
முல்லையின் ஹர்வி