நுவரெலியா மாவட்டம், கந்தப்பளை பிரதேசத்திலுள்ள மாகுடுகலைப் பகுதியில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மாகுடுகலை பிரதேசத்தில் ஐவர் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட போது ஒருவர் மீது பாரிய கல் ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இதையடுத்து அவர் பலத்த காயங்களுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
பொகவந்தலாவை, குயினா தோட்டத்தை சேர்ந்த அம்மாசி விஜயகுமார் வயது (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.
அவருடன் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வரும் மாகுடுகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.