பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ஜவுளி தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இதனையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு அவர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பல மணிநேரம் நடந்த இந்த போராட்டத்தில் திடீரென தொழிற்சாலையில் இருந்து விஷ வாயு வெளியேறியது.
இதனால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன், தொழிற்சாலை இடிந்து விழுந்து மீட்பு பணியில் ஈடுபட்ட 4 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர்.
அத்துடன், 14 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.