இந்திய விளையாட்டு ரசிகர்களால் கொண்டாடப்படும் 16வது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவின் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.
கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 33வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற கொல்கத்தா அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, சி.எஸ்.கே. அணி முதலில் களமிறங்கியது.
சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது.
போட்டியின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் வெறும் 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலாக வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
6 போட்டிகளின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்தது. இன்றைய 7வது ஆட்டத்தில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.