வருட முழுவதும் தங்களுக்கான போட்டிகளில் விளையாடுமாறு இங்கிலாந்து அணி வீரர்களை விலைக்கு வாங்கும் நோக்கில் IPL உருபையாளர்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தயுள்ளனர்.இந்திய நாணயப்படி சுமார் 51 கோடி ரூபா வரை ஊதியம் பேசப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு சர்வதேச போட்டிகளில் இருந்து விளக்கியாக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்தின் ‘டைம்ஸ் லண்டன்’ பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் சபை மற்றும் இங்கிலாந்து கெளன்டி அணி நிர்வாகத்தை விடுத்து, தங்களுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பிலேயே அந்த ஆறு வீரர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். கால்பந்து விளையாட்டில் உள்ளது போன்றே, வீரர்கள் லீக் அணிகளுடன் ஆண்டு ஒப்பந்த முறையில் பணியாற்றுவது தொடர்பாக உலகெங்கும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் சங்கம் ஆலோசித்து வரும் நிலையில் இது நிழ்ந்துள்ளது.
ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்கள், தென்னாபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியம், மேற்கிந்திய தீவுகள் என இதர நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளிலும் அணிகளை வாங்கியுள்ளன.