தெற்கு ஸ்பெயினில் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வியாபாரிகள் அதிக பழங்கள் மற்றும் காய்கறி பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவில் நிலவிய மோசமான வானிலை காரணமாக பல்பொருள் அங்காடிகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டன.
இந்த நிலையில், அங்கு மிளகு, தக்காளி, கீரை மற்றும் வெள்ளரிபோன்ற பொருட்களை வாங்குவதை விற்பனையார்கள் மட்டுப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, இந்த வாரம் மேலும் பழங்கள் மற்றும் காய்கறி பற்றாக்குறை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.