ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய அரசு பற்றிப் பேசவே இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
தேசிய அரசு உருவாக்கம் பற்றி இப்போது பேசப்படுகின்றது. ஓரிரு நாட்களுக்கு முன் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்திலும் இது பற்றிப் பேசப்பட்டது. அதில் கலந்துகொண்ட பலர் இது தொடர்பில் கேள்வி எழுப்பினர்.
“நாங்கள் அறிந்த வகையில் ஜனாதிபதி தேசிய அரசு பற்றிப் பேசவே இல்லை” என்று பதிலளித்தார் ஐ.தே.கவின் முக்கியஸ்தர் சாகல ரத்நாயக்க.
“தேசிய அரசு பற்றிப் பேசியது எதிர்க்கட்சியினர்தான். அவர்களே அது பற்றிப் பேசிவிட்டு இப்போது அரசுடன் இணையப்போவதில்லை என்று சொல்கின்றார்கள். அவர்களுக்குத்தான் தேசிய அரசு தேவை” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐ.தே.கவின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, “முழு நாடாளுமன்றமும் அரசாகச் செயற்படுகின்றது” – என்றார்.