இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் அகொலா மாவட்டம் ஓல்ட் சிட்டி பகுதியில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இன்ஸ்டாகிராம் பதிவு தொடர்பாக இரண்டு மதத்தினர் இடையே நேற்று இரவு இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
இரவு 11 மணியளவில் நடந்த இந்த மோதலில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசியும், வாகனங்கள் அடித்து நொறுக்கி தீவைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர்.
இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் தடியடி நடத்தியும் , கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும் கலவரக்காரர்களை விரட்டியடித்தனர்.
மேலும், இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை நடந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.