இலங்கையில் இறுதிப் போரில் ஈழத் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாகச் செத்து வீழ்ந்ததை நினைவேந்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்கால் மண்ணில் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு உயிர்நீத்த உறவுகளுக்குச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதுடன் தங்கள் உறவுகளை நினைவுகூர்ந்து கதறி அழுதனர்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவரான அருட்பணி சின்னத்துரை லியோ தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து சம நேரத்தில் சுடர்களை மக்கள் ஏற்றினர்.
அதன் பின்னர் ‘முள்ளிவாய்க்கால் பிரகடனம்’ வாசிக்கப்பட்டது. அதனைத் தென்கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் வாசித்தார்.