7 ஆண்டுகளுக்கு முன்னர் சிறைபிடிக்கப்பட்ட ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த டாக்டர் எலியட்டை பயங்கரவாதிகள் தற்போது விடுவித்து உள்ளனர்.
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த கென்னத் எலியட் (வயது 88), இவர் ஆபிரிக்க நாடான பர்கினோ புருசோவில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2016-ம் ஆண்டு மாலி நாட்டின் எல்லைக்கு அருகில் எலியட் தனது மனைவியுடன் சேர்த்து அல்கொய்தா அமைப்பால் கடத்தப்பட்டார்.
பின்னர் ஒரு மாதம் கழித்து எலியட்டின் மனைவி விடுதலை செய்யப்பட்டார்.
எனினும், கடந்த 7 ஆண்டுகளாக சிறை பிடிக்கப்பட்ட எலியட்டை பயங்கரவாதிகள் தற்போது விடுவித்து உள்ளனர்.