சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள டச்செங் பகுதியில் காணப்படும் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்
கடையில் திடீரென தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்த சிலர் மாயமாகி உள்ளதால் அவர்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
விசாரணையில் குறித்த கடை சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.