இலங்கையில் கம்பளை பிரதேசத்தில் சிறியளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்று புவிசரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு இந்த நில அதிர்வு பதிவானது என்றும், பூமியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 2 என்ற அளவில் சிறிய நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ளது என்று புவிசரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு மஹாகனதராவ, ஹக்மன, பல்லேகலை மற்றும் புத்தல ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நில அதிர்வு அளவீடுகளில் பதிவாகியுள்ளது என்றும் அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.